பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிப்பு!

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் பாண் ஒன்றின் புதிய விலை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அவ்வாறே, ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொத்து உள்ளிட்ட உணவுப்பொதிகளின் விளையும் 20 விகிதத்தால் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *