ரம்புக்கனை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு!

கேகாலை ரம்புக்கனை பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த சிலர் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

இதையடுத்து, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு பேர் வரை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply