ரம்புக்கனையில் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிப்பு!

ரம்புக்கனையில் பொலிஸார் – பொதுமக்கள் மோதலை அடுத்து ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு அமுல் செய்யப்பட்ட ஊடரங்குச் சட்டம் இன்று காலையும் அகற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்கிறது.

மறு அறிவித்தல் வரை இந்தப் பகுதியில் ஊரடங்கு நீடிக்கும் என இன்று காலை அறிவித்துள்ள பொலிஸார், ஊடரங்கு காலப்பகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரம்புக்கனையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், இந்த மோதலில் 33 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதனையடுத்து ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியிலேயே நேற்றிரவு ரம்புக்கனையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply