இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயார் – உலக வங்கி

இலங்கைக்கு அவசர உதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer தனது ருவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதித்ததாக அவர் கூறினார்.

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்விக்கு அவசர உதவியை வழங்க தயாராக உள்ளது என்று Hartwig Schafer கூறினார்.

Leave a Reply