உணவு ஒவ்வாமை காரணமாக 100இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

<!–

உணவு ஒவ்வாமை காரணமாக 100இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! – Athavan News

கோகலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு என ஊழியர்கள் புகார் தெரிவித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தொழிற்சாலையில் நேற்று உணவு உண்ட பின்னரே ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply