லக்னோ அணியை 18 ஒட்டங்களினால் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி !

இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஒட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பெங்களூர் அணி சார்பாக அணித்தலைவர் டு பிளெசிஸ் அதிரடியாக ஆடி 96 ஓட்டங்களையும் ஷாபேஸ் அகமட் 26 பெற்றுக் ஓட்டங்களையும் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் லக்னோ அணி சார்பாக குருணால் பாண்டியா 42 ஓட்டங்களையும் கேஎல் ராகுல் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *