“Miss Teen International Botswana 2021” எனும் பட்டத்தை இலங்கைப் பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
கிம்ஹானி பெரேரா என்ற இலங்கைப் பெண்ணே “Miss Teen International Botswana 2021 ” கிரீடத்தை வென்றுள்ளார்.
இந்த போட்டி நேற்று நடைபெற்றுள்ளது. அவர் போட்டியில் போட்ஸ்வானாவின் ´பிலிக்வே´ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இதன்போது, கிரீடத்தை வென்ற கிம்ஹானி தனது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கையில் _
இந்தியாவில் இடம்பெறவுள்ள ´Miss Teen International´ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அந்த கிரீடத்தை வெல்வதே தனது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.