கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட, காக்காமுனை வட்டாரம் 06 ஆம் பகுதியில், வீதி அபிவிருத்தி என்ற பேரில் கொட்டப்பட்ட கிரவல்களால் போக்குவரத்து தடைப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த வீதியில் கொட்டப்பட்ட கிரவல் குமியல்கள் ஒரு கிழமையையும் தாண்டியுள்ளது.
இதனை, செப்பனிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் அதன் ஊடாக போக்குவரத்து செய்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, உரிய கொந்தராத்துக்காரர் மற்றும் அரச அதிகாரிகள் இதுதொடர்பில் கவனம் செலுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.