இலங்கையின் பல இடங்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டம் -சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையின் பல இடங்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை இவ் அரசு மேற்கொண்டு வருகின்றது. இது நம் நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளும் செயற்பாடு, இதனை அனைவரும் தடுத்து நிறுத்த வேண்டு என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்தமை வருமாறு –

யாழ்ப்பாணத்தில் இப்போது சட்டம் ஒழுங்கைப் பற்றி மக்கள் அச்சமடையக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில், வாள் வெட்டு சம்பவங்கள் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று இடங்களில் இடம்பெறுகின்றது. இச் சம்பவத்தில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்பட்டாலும் மிக விரைவாக வெளியில் வந்து விடுகிறார்கள்.

மேலும், இச் சம்பவங்களுடன் ஈடுபடக் கூடியவர்களுக்கு சில பொலிஸாரினினதும், படையினரிடம் சௌகரியங்கள் கிடைக்கின்றது எனவும் கூறப்படுகின்றது. அப்படி, கிடைப்பதனால் அவர்கள் இதனை துணிந்து செய்யும் நிலையும் காணப்படுகின்றது.

சமூகப் பிரச்சினைகள் நிறுத்தப்படாலே மக்கள் அச்சம் இல்லாமல் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படும். ஆகவே, பொலிஸார் மற்றும் படையினர் அவர்கள் உண்மையாகவே மக்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பவர்களேயானால், அவர்களுடன் இருக்கும் தொடர்புகளை விடுத்து, அவர்களுக்கு பாராதூரமான தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், அப்படி செய்தாலே, ஏனையோர் இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே, இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடக்காமல் இருக்க காத்திரமான நடவடிக்கை பொலிஸார் எடுக்கவேண்டும் என்றும், வடக்கில் கஞ்சா, போதைவஸ்து, வாள்வெட்டு என்பவற்றை நிறுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், கொரோனாப் பரவல் காரணமாக பாடசாலைகள், கடைகள் என்னும் திறக்கப்படவில்லை, ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி வரை தனிமைப்படுத்தல் உத்தரவு நீடிக்கப்பட்டருக்கின்ற போதிலும், மதுபானசாலைகள் திறந்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி, அண்மையில் கல்;வியங்காட்டில் மக்கள் கூட்டம் கூடுகிறது என்று கூறி மரக்கறி, மீன் விற்போரின் அடையாள அட்டைகளை பொலிஸார் பறித்து சென்றுள்ளனர். ஆனால், மதுபானசாலைகளில் நிற்கும் மக்கள் கூட்டத்தை அனுமதிக்கின்றார்கள் எனவும் குற்றச்சாட்டியுள்ளார்.

கொவிட் தொற்று இப்போது கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது என தகவல்கள் வருகின்றது. ஆனால், இத் தொற்றை ஆரம்பத்தில் சரியான முறையில் கையாளப்படவில்லை எனவும், சுகாதாரத் துறையினர் மற்றும் வைத்திய நிபுணர்கள் சொல்வதை கேட்டு அரசாங்கம் செய்திருக்குமேயானால் கொரோனாத் தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் உயிரிழப்புக்களை குறைத்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், ரணில் – மைத்திரி கூட்டு அரசாங்கம் இலங்கையின் மாபெரும் சொத்துக்களை வெளிநாட்டுக்குக் கொடுப்பதாகவும் ஒரு பாரிய பிரசாரம் செய்து, தாங்கள் பதவிக்கு வந்தால் இவை அனைத்தையும் தடை செய்வோம் என்ற உறுதி மொழி சிங்கள மக்களுக்கு கொடுக்கப்பட்டே, கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராகவும் அதிகாரத்துக்கு வந்தனர்.

ஆனால், இலங்கையின் பல இடங்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை இவ் அரசு மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே, கொழும்புத்துறை முகத்தின் ஒரு பகுதி 89 வருடக் குத்தகைக்கு சீனாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னைய அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்;கும் அத்தோடு 12 ஏக்கர் காணிகளையும் சீனாவுக்குக் கொடுத்துள்ளது.

இதனிடையே, கொழும்பில் உள்ள முக்கியமான இடங்களை விற்பதற்கும் இலங்கை அரசாங்கம் அதற்கான கேள்விப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ளது. ஆகவே, இலங்கை அரசாங்கம் மிக மோசமான பொருளாதார கொள்கையை வைத்திருக்கிறது.

மேலும், இலங்கையின் உள்நாட்டு வருமதியில் 80 வீதமமான நிதி ஏற்கனவே வெளிநாடுகளுக்கு வாங்கிய வட்டியானச் செலுத்தப்படுகின்றது. இந்நிலையில், இந்த நாட்டைக் கொண்டு செல்ல வேண்டுமேயானால், தொடர்ச்சியாக யாருடமேனும் வட்டிக்கு நிதி எடுக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆகவே, இந்த மண்ணை, இந்த தீவை வெளிநாடுகளுக்கு விற்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது நம் நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளும் செயற்பாடு. ஆகையால், இதனை அனைவரும் தடுத்து நிறுத்த வேண்டு எனவும் கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *