
மன்னாரில் இதுவரை 2,028 கொரோனாத் தொற்றாளர்கள்!
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 28 ஆக உயர்ந்துள்ளது என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது;
மன்னார் பகுதியில் நேற்றுமுன்தினம் 8 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த வருடத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2011 ஆகவும் இந்த மாதம் 344 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 72 ஆயிரத்து 165 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 58 ஆயிரத்து 544 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது.
மன்னாரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.- என்றார்.