ஊரடங்கை நீக்குவதற்கு முன் மது விற்பனையை அனுமதிப்பது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அகில இலங்கை மருத்துவ சங்கம் கூறுகிறது.
இது தொடர்பில், அகில இலங்கை மருத்துவ சங்கம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கு முன்பு மது விற்பனையை அனுமதிப்பது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
ஊரடங்கு உத்தரவு மீறல்கள், குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் துஸ்பிரயோகம் என்பன அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், கொரோனாப் பரவலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மது பயன்பாட்டின் பிற விளைவுகள் கொரோனா நோயாளிகளை நிர்வகிப்பது உட்பட, சுகாதாரத் துறைக்கு மற்றொரு சுமையைச் சேர்க்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, மது விற்பனையை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சரிடம் மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இணையத்தின் மூலம் மது விற்பனையை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.





