நாட்டில் தற்போது மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கப்ரால் தான் கொரோனா வைரஸை விட மிகப்பெரிய காசு வைரஸ் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
தொடந்து தெரிவிக்கையில்,
தற்போது மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கப்ரால் மிகப்பெரிய காசு வைரஸ், இவர் கொரோனா வைரஸை விட மோசமானவர் என்றும் கணக்காய்வு பிரிவுக்கு அதிகமான தலையிடையை கொடுத்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இப்போது அவரின் கையில் மத்திய வங்கி உள்ளது. அவரின் மனைவி, பிள்ளைகள், உறவுகள் அனைவரும் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களில் பணிப்பாளராக உள்ளனர்.
இதன் காரணமாக அவரை காசு மரம் என்றே கூற முடியும், அந்த அளவுக்கு மோசமான ஒருவரை இந்த அரசு நியமித்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஒருவர் பதவியில் இருந்து விலகினால் அவருக்கு பொருத்தம் இல்லாத மிகப்பெரிய பதவிகளை வழங்கும் வல்லமை இந்த அரசுக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.