திருகோணமலை மாவட்டத்தில், 20 வயது தொடக்கம் 29 வயது வரையான இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த 19ஆம் திகதி முதல் நடைபெற்றது வருகின்றது.
இதற்கு, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய, திருகோணமலை மாவட்ட, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், தேசிய இளைஞர் கழக அங்கத்தவர்கள் தடுப்பு ஊசி ஏற்றும் நிலையங்களிலுள்ள சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக, தமது பங்களிப்பை வழங்கி வருவதாக மாவட்ட உதவிப் பணிப்பாளர்களான எஸ்.ரவிகரன் மற்றும் மஹிந்த திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஒரு நிலையத்தில் 5 பேர் என்ற அடிப்படையில் இளைஞர், யுவதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

