முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் தடத்தில் பெண் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது.
5 அடி நீளம் கொண்ட இப் பெண் சிறுத்தை புலி வேட்டைக்காக கட்டப்பட்டிருந்த தடத்தில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், இன்று பகல் இச் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும், இச் சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, வில்பத்து காட்டில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.