பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்க மஹஜர் கையளிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் பட்டதாரி பயிற்சி பெறுபவர்களை நிரந்தரம் செய்ய கோரி நியமனத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம் மகஜர் ஒன்று இன்று (21)கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.

2020 ம் ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி நியமனம் வழங்கப்பட்ட நிலையில் ஒரு வருடம் கடந்தும் பட்டதாரி பயிலுனர்களாகவே கடமையாற்றி வருகின்றார்கள் இதனை முன்வைத்து நிரந்தர நியமனம் வழங்குமாறும் மஹஜர் கையளிக்கப்பட்டது.

பயிற்சியாளர்களை நிரந்தரம் செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று முதல் முறையாக ஒன்றிணைந்த பயிற்சியாளர் சங்கத்தினரை சந்தித்தனர்.

பயிற்சியாளர்களை நிரந்தரமாக்க கோரி இன்று நியமனத்துக்கு பொறுப்பான அமைச்சர் குழுவிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர் அமைச்சர்கள் குழுவை ஒருங்கிணைந் பயிர்சியாளர் சங்கத்தின், ஜி.வி.டி. தம்மிகமுனசிங்க மற்றும் தென்னே ஞானந்த தேரர் ஆகியோர் சந்தித்து மகஜரை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *