கொழும்பு, ஏப் 25
இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் மத ஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டார்.
இன்று காலை 8 மணி அளவில் நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட அவர் பின்னர் யாழ் மரியன்னை ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். தூதரின் வருகையின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகளும் பங்கேற்று இருந்தனர்.

