கிண்ணியா பிரதான வீதி,வில்வெளி என்ற இடத்தில் இன்று செவ்வாய்கிழமை சற்றுமுன்னர் நடந்த விபத்து ஒன்றில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார்.
எனினும் இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, விபத்தில் உயிரிழந்த நபர் கிண்ணியாவை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, கிண்ணியாவில் இருந்து மணல் ஏற்றி தென் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
மேலும் இச் சம்பவம் குறித்து, கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





