கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத்தமிழரான ஹரி ஆனந்த சங்கரி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்த சங்கரி 16,051 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary யை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
Scarborough—Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்த சங்கரி போட்டியிட்டார். அவர் மொத்தமாக 23,901 வாக்குகளை பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary 8,059 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.