உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பானில் காலமானார்

டோக்கியோ, ஏப் 25

ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்தவர் கேன் தனகா. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற இந்த மூதாட்டி, கடந்த 19ம் தேதி தனது 119வது வயதில் காலமானார். இத்தகவலை அரசு திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

1903ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பிறந்த கேன் டனாகா, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனது 116-வது வயதில் மிகவும் வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் 117 வயது மற்றும் 261 நாட்களை எட்டியபோது, ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வயதான நபராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *