நாட்டில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்கு இணங்க திருமண நிகழ்வுகளை 150 பேருடன் நடத்த அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விதிகளை மீறி சில இடங்களில் அதிக மக்கள் தொகையுடன் உரிய கட்டுப்பாடுகளும் அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படாமல் திருமண நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
எனவே அனைத்து திருமண நிகழ்வுகளும் இன்று (23) முதல் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், திருமணத்தின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப நிர்வாகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.