மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை அனுராதபுரம், திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.
மூவர் அப் பகுதியில் நடந்து சென்ற சந்தர்பத்தில் இருவர் மீது துப்பாக்கி சுடப்பட்டுள்ளது.
இதனை ஊர்மக்களுக்கு அறியத்தருவதற்காக ஓடிச் சென்ற மூன்றாவது நபர் மீதும் கட்டுத் துப்பாக்கி வெடித்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும், இதுதொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.