அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடாளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் கடந்த 24 நாட்களாக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை ஆர்ப்பாட்டப் பகுதி கோட்டா கோ கம என்றவாறு பெயரிடப்பட்டுள்ளது.
இதேவேளை கோட்டா கோ கம அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது.
இவ்வாறாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட கோட்டா கோ கமவானது தற்போது பல இடங்களிலும் பரந்து விரிந்து கிளைகளை பரப்பி வருகின்றது.
ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நிழலில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தின் ஒரு மூலை மினி கோட்டா கோ காமாவாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை நேற்றையதினம் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நிழலில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் ஒன்று கூடி இலங்கை அரசியலில் இருந்து அனைத்து ராஜபக்சக்களையும் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கோரினர்.
இதேவேளை இலங்கையில் நடைபெறும் போராட்டக்காரர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மே 13ஆம் தேதி வரை நாடாளுமன்ற சதுக்கத்தில் கோட்டா கோ கம நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.



