தப்போவ சரணாலயத்தில் சட்டவிரோத துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் இன்று குறித்த பகுதியில் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்போவ சரணாலயத்தில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக குறித்த துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களுடன் வருகை தந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.