முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமிக்கு நீதிவேண்டி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று இன்று (23) இடம்பெற்றது.
சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில்,
ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி குறித்த கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அவர்கள் பணி செய்யும் பகுதிகளில் பல்வேறு துஸ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக ஹிசாலியின் மரணத்துடன் தொடர்புபட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அத்துடன் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களையும், தரகர்களையும் கடுமையான தண்டணைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்றனர்.
குறித்த கையெழுத்து பிரதிகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.