
பிரதி சபாநாயகர் தெரிவு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இதையடுத்து இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை ஐக்கிய மக்கள் சக்தி பிரதி சபாநாயகருக்கான வேட்பாளராக நியமித்துள்ளது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறி விட்டோம் என்று இத்தனை நாட்கள் நாடகம் நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மேலும் சிலரை இது அம்பலப்படுத்தும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
#SJB has nominated Imthiaz Bakeer Markar since the government stated that they support the nomination of Ranjith Siyambalapitiya. This would expose #SLFP and others who have staged a drama all these days saying that they have left the government!
— M A Sumanthiran (@MASumanthiran) May 5, 2022