இலங்கைக்கு பங்களாதேஷ் மருத்துவ உதவி

கொழும்பு, மே 06

56 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய மருந்து பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் முன்வந்துள்ளது.

2.3 மில்லியன் அமெரிக்க டொலர் ( 830 மில்லியன் ரூபாய்) பெறுமதியுடைய அத்தியாவசிய மருந்துகளே இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதனை உத்தியோகபூர்வமாக வழங்கும் விழா இன்று டாக்காவில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *