
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பில் முகநூலில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2022.05.03ஆம் திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என முகநூலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
ஜனாதிபதி அலுவலகம் அரச நிர்வாக அமைச்சுக்கு இவ்வாறு அறிவிப்பு விடுக்கவில்லை என்பதுடன், இந்த பொய்ப் பிரச்சாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.