மாணவர்களை இலக்கு வைத்த போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்ட யாபாரிகள் மூவர் கைது!

பாடசாலை மாணவர்கள், தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளை இலக்கு வைத்து நீண்ட காலமாக என்.சி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 நபர்களை நோர்வூட் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் இன்று வெள்ளிக்கிழமை ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பேரேமலாலின் வழிகாட்டலில் குறித்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது பலசரக்கு தூள் போன்று மிகவும் சூக்சுமான முறையில் 400 கிராம் கொண்ட 16 பக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட 6400 கிராம் என்.சி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த 400 கிராம் அடைக்கப்பட்ட பொதி ஒன்று சுமார் 6000 ரூபாவுக்கும் 20 கிராம் பொதி ஒன்று சுமார் 300 ரூபாவுக்கும் விற்பனை செய்து வருவதாகவும் குறித்த போதை பொருள் கொழும்பிலிருந்து கொண்டு வரப்படுவதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துளளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *