
தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என மக்கள் விடுதலை முன்னையின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஏனைய கட்சிகளும் அதற்கு இணங்கினால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என கூறினார்.
நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான குறுகிய மற்றும் நீண்டகால திட்ட யோசனைகளை நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவியில் இருக்கும் வரை நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவாது என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஆகவே அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.