கோட்டா கோ கமவின் மக்கள் அழுத்தம் தொடர வேண்டும் என மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி லிஹினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
அந்த நாற்காலியில் யார் பிரதமராக அமர்ந்தாலும், 9/5 அன்று வன்முறையைத் தூண்டிய SLPP குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நீங்கள் ராஜபக்ஷவுடன் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். #GotaGoGama இன் மக்கள் அழுத்தம் தொடர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
