யாழ் செம்மணியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் தினம் இன்று இடம்பெற்றது.
அந்தவகையில் பாராளுமன்ற பெண் உறுப்பினரான வாசுகி, சமூகம் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
செம்மணியில் படுகொலைகள் மற்றும் படுகுழிகள் அமைக்கப்பட்ட இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தோம்.
2009 ஆம் ஆண்டளவில் தமிழினத்தை பாரியளவில் அழித்தொழித்த இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் தமிழ் விடுதலைக்காக போராடி உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்காவும் இந்த நினைவேந்தலினை செய்துகொண்டிருக்கிறோம் .
மேற்குறித்த ஆண்டில் இடம்பெற்ற இனப்படுகொலையின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் இற்றை வரைக்கும் சிறைக்கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் உறவுகளுக்கும் , கொல்லப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்கும் வரை தமிழர் தேசம் எங்கும் உலகளாவிய ரீதியில் அறியப்படும் வகையில் இந்த நினைவேந்தலினை கொண்டாடுவோம்.
எங்களுக்கான தேச அங்கீகாரம் கிடைக்கும் வரையில் சந்ததி முறையில் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் – என்றார்.