சந்தையில் கிடுகிடுவென உயர்ந்த மெழுகுவர்த்தி விலை

சந்தையில் மெழுகுவர்த்திகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

சிறிய மெழுகுவர்த்தி 20 ரூபாவுக்கும், நடுத்தர அளவிலான மெழுகுவர்த்தி 30 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன. மேலும் பெரிய மெழுகுவர்த்தி ஒன்று 100 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

இந்த வெசாக் காலத்தில் மெழுகுவர்த்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதால் வியாபாரிகள் அதிக விலைக்கு மெழுகுவர்த்திகளை விற்பனை செய்வதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் மெழுகுவர்த்தியின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *