கண்டி மாவட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு

கொழும்பு, மே 13

நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மழைவீழ்ச்சி பெய்துள்ளதுடன் கண்டி மாவட்டத்தின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து.

அத்துடன், 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள, இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, அம்பகமுவ, நுவரெலியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கிரியெல்ல, எலபாத்த, அயாகம, நிவித்திகல, எஹெலியகொட, கலவான, பலாங்கொடை, இம்புல்பே,  மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *