அமெரிக்க தூதுவருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இந்தச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு அமெரிக்கா உதவி வழங்க வேண்டும் என இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமெரிக்க தூதுவரிடம் கோரிக்கை விடுத்தது.

அத்துடன், இலங்கைக்கான அமெரிக்காவின் பொருளாதார, கலாசார, சமூக ரீதியான உதவித்திட்டங்களில் எதிர்காலத்தில் மலையக மக்கள் உள்வாங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமெரிக்க தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தது.

மேலும் உலக வங்கி, இலங்கைக்கு உதவி வழங்குவதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *