அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை

புதிய அரசாங்கம் முன்வைக்கும் முற்போக்கான திட்டங்களுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் மக்கள் சார்பில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *