எதிர்காலத்துக்காக சமந்தா போட்ட திட்டம் வாய்பிளக்கும் திரையுலகம்.!

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. தற்போது தமிழில் கைவசம் காத்துவாக்குல இரண்டு காதல், சகுந்தலம் திரைப்படங்கள் இருக்கின்றன.

தி பேமிலி மென் வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய விமர்சனங்களை பெற்று வந்தது. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் சமந்தா தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அத்துடன் உடற்பயிற்சி செய்வது மாடித்தோட்டம் அமைப்பது என்று பலவற்றில் கவனம் செலுத்தி வருகின்றார்.

அவ்வப்போது, சமூக வலைதளங்களில் தனது செயல்பாடுகளை புகைப்படம் எடுத்து பதிவிடுவது வழக்கம். எதிர்பாராத நேரங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுப்பார்.

இந்த நிலையில், தற்போது சமந்தா எடுத்துள்ள ஒரு முடிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. தற்போது வெப்சீரிஸில் பட்டையை கிளப்பி வரும் சமந்தாவுக்கு பாலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது.

எனவே, அதற்கு ஏற்றார் போல அவர் மும்பையில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வர எதுவாக அவர் மும்பையில் வீடு வாங்க போகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *