திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்கு திரிசீடி சந்தியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் நேற்று (23) காலை இருவரை மூதூர் போதை ஒழிப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் போது ஆண் ஒருவரிடமிருந்து 16 ஆயிரம் மில்லி கிராம் கேரளா கஞ்சாவும், பெண் ஒருவரிடமிருந்து 1000 மில்லி கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோம நுவர தெரிவித்தார்.
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட பெண்ணும், ஆணும் மூதூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.