இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டுப்பொறுப்பு உடனே கட்டியெழுப்ப முடியும் என யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிதம்பரநாதன் உதயகுமார் தெரிவித்தார்.
இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடி நிலைமையை சந்தித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கான எதிர்வு கூறல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இலங்கையில் திட்டமிடாமல் நடைபெற்ற பகுதிகளில் மற்றும் வெளிநாட்டு கடன் காரணமாக இன்று பாரிய பொருளாதார சூழ்நிலையை இறங்கு முகம் கொடுத்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் கேட்க வேண்டுமானால் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார்கள். ஆனால் சீனாவிடம் நிபந்தனை இல்லாமல் கடன்களை வேண்டியது. எனவே தற்போது நாடு பாரிய பொருளாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.- என்றார்.

