கனேடிய மாகாணம் ஒன்றில் வீடு ஒன்றை சுத்தம் செய்யும்போது மீட்கப்பட்ட வெடிபொருள்!

கனேடிய மாகாணம் ஒன்றில் வீடு ஒன்றை சுத்தம் செய்யும்போது வெடிபொருள் ஒன்று கிடப்பதைக் கண்ட அந்த வீட்டுக்காரர்கள், பதறிப்போய் பொலிசாரை அழைத்துள்ளனர்.

Caswell Hill பகுதியில் அமைந்துள்ள வீட்டில் அந்த வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார், தேசிய பாதுகாப்புப் படைக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து அந்த வெடிபொருளை சோதித்துள்ளனர்.

சோதனையில், அது இரண்டாம் உலகப்போர்க்காலத்தைச் சேர்ந்தது என்றும், அது வெடிக்கும் நிலையில் உள்ளது அல்ல என்றும் கண்டறிந்துள்ளனர்.

Advertisement

பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அந்த வெடிபொருள் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *