சஜித் காக்கை பாதுகாவலனாகவும் செயற்படுகிறார் – பாலித ரங்கேபண்டார

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன் கதவின் ஊடாகச் சென்று பொதுமக்களுக்குப் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும் அவர் பின் கதவு வழியாக பசில் ராஜபக்ஷவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் வேடத்தில் மாத்திரமல்ல காக்கை பாதுகாவலனாகவும் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் பிரதிநிதிகள் நடத்திய கலந்துரையாடலின்போதே பாலித ரங்கேபண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “21ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என நாடு முழுவதும் சுற்றித்திரியும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒரே நோக்கம் ராஜபக்ஷக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதேயாகும்.

21ஆவது திருத்தச் சட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக இருந்த போதிலும் எம்.ஏ.சுமந்திரம் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகிய இருவர் மாத்திரமே எதிர்க்கின்றனர். எனவே, பசில் ராஜபக்ஷவின் ஒப்பந்தத்தை அவர்களும் நிறைவேற்றி வருவது புலனாகின்றது.

21வது திருத்தமானது 19வது திருத்தத்தை விடவும் சக்தி வாய்ந்ததும் ஜனநாயகமானதுமான அரசியலமைப்புத் திருத்தம். பாராளுமன்றத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *