
கொழும்பு,ஜுன் 02
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரைக் கருத்திற் கொண்டு லசித் மாலிங்கவுக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் லசித் மாலிங்க இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.