தாய்வான்-அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பு

சீனா,ஜுன் 02

தாய்வான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு சீனா முழுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன், தாய்வான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், குறித்த நோக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலேயே தாய்வானுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய நாடுகள் தாய்வானுடன் மேற்கொள்ள முயற்சிக்கும் எந்தவொரு உத்தியோகபூர்வ தொடர்புகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சர்வதேச விநியோகச் சங்கிலியில் முக்கிய இடம் பெறுவதற்கு தமக்கு அமெரிக்காவினூடாக புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தாய்வான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *