
கொழும்பு – காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக சென் ஜோன் நோயாளர் காவு வண்டி படையணி, களத்தில் கூடாரமமைத்து தமது ஆதரவை வழங்கி வருகிறது.
இலங்கையின் பேரிடர்டகள் மற்றும் விபத்துக்களுக்கு முன்வந்து சிகிச்சை அளிக்கக்கூடிய சென் ஜோன் நோயாளர் காவு வண்டி படையணியே இவ்வாறு தமது ஆதரவை வழங்கி வருகின்றது.
போராட்டக்களத்திற்கு வரும் பொதுமக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்காகவே கூடாரம் அமைத்து தமது ஆதரவை வழங்கி வருவதாக அந்தப்படையணி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மருத்துவ குழாமில் மருத்துவமனையில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இருப்பதாக ஜோன் அம்புலன்ஸ் படையணியின் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் 58வது நாளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்




