உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 5) பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயம் ஏற்பாடு செய்த மரம் நடுகை நிகழ்வு பாடசாலை வளாகத்தில் அதிபர் எம். எம். முஹம்மட் நியாஸ் தலைமையில் பிரதி அதிபர் எம்.சி நசார் ஒருங்கிணைப்போடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் பொத்துவில் மாவட்ட நீதிபதியுமான ஏ.சி.றிஸ்வான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலையில் பசுமை சூழலை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் பயன்தரும் மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலைச் சூழலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு பொருத்தமான பசுமையான சூழலாக உருவாக்கவேண்டிய விடயம் தொடர்பிலும், பாடசாலையின் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் தொடர்பிலும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி பாடசாலை ஆசிரியர்களோடு சுமுகமாக கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், வலயக்கல்வி அலுவலகத்துக்கான பாடசாலை இணைப்பாளர் பி.ரி.ஏ.மஹ்றூப், அபிவிருத்திக் குழுச் செயலாளர் ஏ.ஏ.அஸீஸ் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.




பிறசெய்திகள்
இளைஞர்களின் வாழ்வை மாற்றிய சிறுவன்!




