
தங்காலை மொரகெட்டியாராவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, கடந்த 72 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அளுத்கம மற்றும் பாணந்துறை பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், நேற்று அஹங்கமவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




