வலிவடக்கு நவக்கிரி பகுதியில் கல்வி நிலையம் திறப்பு 

வலிவடக்கு நவக்கிரி வித்தகபுரம் பகுதியில் மாலைநேரக் கல்வி நிலையக் கட்டிடமொன்று நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

நவக்கிரி வித்தகபுரம் விடியல் மக்கள் முன்னேற்றக் கழகத்தினால் லண்டன் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் மாலைநேரக் கல்வி நிலையக் கட்டிடம் கட்டப்பட்டது.

நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற திறப்பு விழாவில் முதன்மை விருந்தினர்களாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன், ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர் கந்தையா பிரபாகரனும் கௌரவ விருந்தினர்களாக அப்பகுதி கிராம அலுவலர் ஜெயவிந்தன், ஏவிஆர் அறக்கட்டளைப் பணிப்பாளர் பொன்னுத்துரை லயன் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் புதிய கல்விநிலையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன் பெயர் பலகையும் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *