
கொழும்பு, ஜூன் 6: தூர சேவைகள் மற்றும் கிராம மட்டத்திலான பஸ் சேவைகள் இன்று திங்கள்கிழமை வழமைபோன்று இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இன்று முதல் தனியார் பஸ் சேவைகள் 50 வீதத்தால் குறைக்கப்படும் என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்து நிலையில், இலங்கை போக்குவரத்து சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
மேலும், இலங்கை போக்குவரத்து சபையிடம் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு, அடுத்த சில தினங்களுக்கு போதுமானது என்று சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி A.S.B. வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.




