
அரச, அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்று முதல் ஆரம்பமாகும் புதிய கட்டத்திற்கான பாடதிட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு சகல பாடசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை 40 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், டீசல் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




