நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஷ்ய எரோஃபிளொட் விமானம் தொடர்பில் சட்டமா அதிபர் நீதிமன்றில் இன்று மனுவொன்றின் மூலம் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார்.
191 பயணிகள் மற்றும் 32 பணிக்குழாமினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த விமானம் கடந்த இரண்டாம் திகதி வந்தடைந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டது.
இவ்வாறு குத்தகை பிரச்சினை காரணமாக ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் வேறு விமானங்கள் ஊடாக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை காரணமாகஇ இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃபிளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




