பாடசாலை பேருந்து கட்டணங்களிலும் மாற்றம்- விசேட அறிவிப்பு வெளியாகியது!

நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவு; எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக பல்வேறு துறைசார் செயற்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில்

2022 ஆம் ஆண்டிற்கான 02ம் கட்ட பாடசாலை தவணை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தூர இடங்களில் உள்ள மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில் பாரிய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

டீசல் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்துகள் தமது சேவையை இடைநிறுத்துவதாகவும் நேற்று அறிவித்திருந்தன.

இதனால் இன்று காலை மாணவர்கள் பாரிய நெருக்கடியை எதிர் கொண்டிருந்தனர்.
இதேவேளை இன்று தொடக்கம் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் 40 வீதம் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *